ஜீவ சமாதியின் விளக்கம்

ஜீவ சமாதி என்றால் என்ன?


Siddha Yogi Swami Samaiya
       சித்தயோகி பிரம்மஸ்ரீ சாமய்யா 


Swami Sivananda Paramahamsar

சுவாமி சாமய்யாவின் குருநாதர் சித்த சமாஜ ஸ்தாபகர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர் 


ஒரு யோகியோசித்தரோ அவர்கள் உடல் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் (அமர்ந்திருந்தால் அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும்நின்றிருந்தால் அப்படியே நின்றபடி இருக்கும்படுத்திருந்தால் அப்படியே படுத்தப்படியே இருக்கும்தன்னுடைய உயிரை (ஆத்மாவைகபாலத்தின் (அல்லது உச்சிவழியே உடலை விட்டு பிரித்து இந்த பிரபஞ்சத்தில் ஐக்கியமாவததை ஜீவ சாமாதி என்பார்கள்இதனை 'உயிர் மேலெழும்புவதுஎன்றும் கூறுவதுண்டு.

ஜீவ சாமாதியின் சிறப்பு என்னவெனில் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றிசுருங்கிப் போகும்ஒரு யோகி ஜீவ சமாதியாகும் பொழுதுஅவரின் ஜீவபோதமானது பரபோதமாக மாறுகிறதுஉடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறதுபொறிகளாகிய கண்மூக்குசெவிபோன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது.
தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கி விடுகின்றனஅந்தி வேளை வரும் போதுதன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் இதயத்தில் அடங்கி விடுகிறது.

உடலெங்கும் சீதம் பரவுகிறதுஅதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறதுகடைசியாக பிரானான் ஆனது யோகியின் உச்சந்தலைக்கு வந்து சேருகிறதுஅதனால் உச்சந்தலையில் மட்டும் நெடு நேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.
அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும்ஆதி நாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம்அலகிலா ஜோதிபேரின்பம்சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர்.
இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலைஇது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம்சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலைஅதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்லஇந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கிஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள்ஜீவ சமாதியான யோகிகள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு.

அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்இதற்கு சாட்சியாக இன்றும் சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் முழு மனதோடு வேண்டுபவர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் அருளுவதை நாம் கண் கூடாகக் காணலாம்.

Comments

Popular posts from this blog

Swami Samaiya Jeeva Samadhi Coimbatore